Logo

ப்ரியங்காவின் பாலியல் வழக்கு! என்கவுண்டரில் நிலவும் மர்மங்கள்!

ஹைதராபாத்தில் இளம்பெண் மருத்துவர் வன்புணர்வு கொலை வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளும் தப்பிக்க முயற்சி செய்ததாக இன்று அதிகாலை ஹைதராபாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 | 

ப்ரியங்காவின் பாலியல் வழக்கு! என்கவுண்டரில் நிலவும் மர்மங்கள்!

ஹைதராபாத்தில் இளம்பெண் மருத்துவர் வன்புணர்வு கொலை வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளும் தப்பிக்க முயற்சி செய்ததாக இன்று அதிகாலை ஹைதராபாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் இன்று அதிகாலையில் என்கவுண்டர் செய்யப்பட்டதை பொதுமக்களும், பிரபலங்களும் வரவேற்றாலும், இந்த வழக்கில் நிறைய பதில் தெரியாத கேள்விகள் இன்னும் உலவிக் கொண்டு இருக்கிறது.

மிக மோசமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடுமையாக கொலைச் செய்யப்பட்ட இளம் மருத்துவர் ப்ரியங்காவின் வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர். முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த என்கவுண்டர் அதிகாலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்கு நடந்தது என்று சைபராபாத் துணை கமிஷ்னர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த என்கவுண்டரில் ஈடுப்பட்ட போலீசார் இந்த சம்பவம் நடந்தது அதிகாலை 3.30 மணிக்கு என்று கூறியுள்ளனர். இந்த நேர வித்தியாசம் நிறைய சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
ஒருவேளை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்றால் ஏன் அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு குற்றவாளிகளை கொண்டு செல்ல வேண்டும். பாதுகாப்போடு அதிகாலையில் அல்லது மாலையில் கொண்டு சென்று இருக்கலாமே, ஏன் பின் இரவில் கொண்டு சென்றார்கள், என்ன திட்டத்துடன் அப்படி செய்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

ப்ரியங்காவின் பாலியல் வழக்கு! என்கவுண்டரில் நிலவும் மர்மங்கள்!

இது மட்டுமின்றி அவர்கள் நான்கு பேரும் போலீசாரை கல்லால் தாக்கி இருக்கிறார்கள். இன்னொருவர் போலீசாரின் துப்பாக்கியை வைத்து அவர்களை சுட முயன்றுள்ளார். அவர் போலீசிடம் இருந்து துப்பாக்கியை பறித்து அவர்களை கொலை செய்ய முயன்றுள்ளார். இது எப்படி நடந்தது, நான்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்றிருக்கும் நிலையில், போலீசார் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துள்ளனர் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
நான்கு குற்றவாளிகளும் கையில் விலங்கு மாட்டி இருந்தனர். அதை மீறி அவர்கள் கையில் எப்படி துப்பாக்கி சென்றது. அப்படி அவர்கள் விலங்கு மாட்டவில்லை என்றால், அவ்வளவு மோசமான கொலைகாரர்களுக்கு ஏன் விலங்கு அணிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் முதலில் போலீசார் அந்த 4 பேரையும் 7 நாள் கஸ்டடி கேட்டார்கள். இந்நிலையில் பொறுமையாக 5 நாள் காத்திருந்து அவர்களை குற்றம்  நடந்த இடத்திற்கு கொண்டுச் சென்று விசாரித்துள்ளனர். போலீசார் பொதுவாக விசாரணையில் முதல் நாளோ அல்லது மறுநாளோ தான் குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து செல்வார்கள். அதன்பின் அறிக்கை தயார் செய்து பின்னர் வாக்குமூலங்களை வாங்குவார்கள். ஆனால் இந்த முறை போலீசார் 5 நாட்கள் காத்து இருந்தது. என்ன திட்டத்திற்காக போலீஸ் இப்படி காத்து இருந்தது , பிண்ணனியில் என்ன நடந்தது என்று கேள்வி எழுந்துள்ளது.

அதே போல் களத்தில் இருந்த உயர் அதிகாரிகள் யார். அங்கு பிரச்சனை வந்த அந்த நேரத்தில் என்கவுண்டர் செய்ய அனுமதி கொடுத்த அதிகாரி யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நான்கு குற்றவாளிகளும் கொல்லப்பட்டதே மேல் என்றும், ஒரு பெண்ணை துடி துடிக்க கொன்றவர்களை போலீசார் கொன்றுள்ளது தவறில்லை என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP