மதுபானங்களின் விலைகள் உயர்கிறது: முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலைகளை உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 | 

மதுபானங்களின் விலைகள் உயர்கிறது: முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலைகளை உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் மதுபானங்களின் வரியை உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவித்த முதல்வர், புதுச்சேரியில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை தமிழகத்தைவிட 60% குறைவாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

மகளிர் சுயஉதவிக்குழுக்குள் மூலம் அதன் உறுப்பினர்கள் வாங்கும் கடன் மீது விதிக்கப்படும் 3% வட்டியை அரசு செலுத்த புதுச்சேரி அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், நிதி பற்றாக்குறையில் மத்திய அரசு இருக்கும்போது பட்ஜெட்டில் அதிக திட்டங்களை அறிவித்துள்ளதாகவும், திட்டங்களை செயல்படுத்த நிதி எங்கே இருக்கிறது என்பதை நிதி அமைச்சர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP