குடியரசுத் தலைவர் வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு!

கோவையில் நாளை மறுநாள் நடைபெறும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 | 

குடியரசுத் தலைவர் வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு!

கோவையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள மஹா சிவராத்திரி நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா வரும் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையொட்டி அவர், நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 3.40 மணிக்கு கோவை வருகிறார்.

பந்தய சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் குடியரசு தலைவர், மறுநாள் காலை  சூலூர் விமானப் படைதளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறந்த சேவைக்கான விருதுகளை வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தில் மாலை நடைபெறவுள்ள  மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்குள்ள தியான லிங்கம், லிங்க பைரவி தேவி, சூர்ய குண்டம், ஆதியோகி சிலை ஆகியவற்றை பார்வையிட உள்ளார். 

குடியரசுத் தலைவர் வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு!

இந்நிலையில், குடியரசு தலைவர் வருவதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும்  5,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமான நிலையம், அரசு விருந்தினர் மாளிகை, சூலூர் விமானப்படை தளம், குடியரசு தலைவர் கார் செல்லும் வழித்தடங்கள் என அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. குடியரசுத் தலைவர் பயணிப்பதற்காக குண்டு துளைக்காத கார் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP