குடியரசுத் தலைவர் இன்று சென்னை வருகை!

மகாத்மா காந்தி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
 | 

குடியரசுத் தலைவர் இன்று சென்னை வருகை!

மகாத்மா காந்தி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ப்பதற்காக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னைக்கு வருகிறார்.  

சென்னையில் நடைபெறும் மகாத்மா காந்தி சிலை திறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.35 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

அங்கிருந்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்று ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர், பின்னர் மாலை 4 மணிக்கு தி.நகரில் நடைபெறவுள்ள ஹிந்தி பிரச்சார சபா விழாவில் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்கவுள்ளார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP