ஜல்லிக்கட்டை பார்வையிட ரஷ்ய அதிபர் புடின் வருகை?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் புடின் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஜல்லிக்கட்டை பார்வையிட ரஷ்ய அதிபர் புடின் வருகை?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் புடின் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் போன ஊர் மதுரை அலங்கா நல்லூர் ஆகும். இங்கு பொங்கலையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  மாடுபிடி வீரர்கள் வருவதுண்டு. மேலும் காளைகளும் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்துவந்து போட்டியில் பங்கேற்க வைப்பதுண்டு. 

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஜல்லிக்கட்டை பார்வையிட உள்ளதாகவும், புடின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP