முன்னதாகவே திறக்கப்பட்ட பள்ளி: வேன் சக்கரத்தில் சிக்கி பலியான மாணவன்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

முன்னதாகவே திறக்கப்பட்ட பள்ளி: வேன் சக்கரத்தில் சிக்கி பலியான மாணவன்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பள்ளி வேனில் இருந்து இறங்கியபோது 2-ஆம் வகுப்பு மாணவர் முகுந்தன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஓட்டுநரின் கவனக்குறைவால் முகுந்தன் வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, பள்ளி வேன் ஓட்டுநர் ராமராஜனை கைது செய்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஜூன் 3-ஆம் தேதிதான் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற நிலையில் முன்னதாகவே பள்ள் இயங்கியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP