அபிநந்தனின் குடும்பத்தினரை சந்தித்தார் பிரேமலதா!

அபிநந்தன் பாதுகாப்பாக வீடு திரும்புவார் என்ற முழு நம்பிக்கையில் அவரது தந்தை இருப்பதாக, அபிநந்தனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
 | 

அபிநந்தனின் குடும்பத்தினரை சந்தித்தார் பிரேமலதா!

அபிநந்தன் பாதுகாப்பாக வீடு திரும்புவார் என்ற முழு நம்பிக்கையில் அவரது தந்தை இருப்பதாக, இன்று அபிநந்தனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. பாகிஸ்தான் போர் விமானத்தை தாக்கிய போது, எதிர்பாராத விதமாக, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் சிக்கினார். அவரை மீட்கும் முயற்சியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வரும் அபிநந்தனின் பெற்றோரை சந்திக்கும் பொருட்டு தமிழக அரசியல் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து திமுகவின் டி.ஆர்.பாலு அபிநந்தனின் தந்தையை இன்று நேரில் சந்தித்து பேசினார். 

அபிநந்தனின் குடும்பத்தினரை சந்தித்தார் பிரேமலதா!

அதைத்தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அபிநந்தனின் தாய், தந்தையரை சந்தித்து நம்பிக்கை தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அபிநந்தனின் தந்தை மிகவும் தைரியமாக இருக்கிறார். 'அபிநந்தன் எனது மகன் மட்டுமல்லாமல் இந்த நாட்டிற்கு மகன். எனவே அவரை மீட்பதில் இந்தியா நடவடிக்கை எடுக்கும். ஒட்டுமொத்த இந்தியாவின் அன்பும், ஆதரவும் எனது மகனுக்கு இருக்கிறது' என்று அவரது தந்தை கூறும் போது எங்களுக்கு பெருமையாக இருந்தது. அவர்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப நாமும் பிரார்த்திப்போம்" என்று பேசினார். 

தொடர்ந்து அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் அபிநந்தன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP