சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தமிழகம் முழுவதும் பிரார்த்தனை!

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கும் குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பலதரப்பட்ட மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 | 

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி பகுதியில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து 20 நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குழந்தை நலமுடன் விரைவில் மீட்கப்பட வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். குறிப்பாக காலை முதல் நாகூர் தர்க்காவில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் குழந்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதேபோல், பலஅமைப்புகள் மற்றும் தனி மனிதர்கள் குழந்தை சுர்ஜித்துக்காக பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும் #prayforsurjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் பக்கத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

Newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP