பிரகாஷ்ராஜ் எப்போதும் மோசமாக தான் பேசுவார்: தமிழிசை கடும் கண்டனம்!

நடிகர் பிரகாஷ்ராஜ், தமிழ் மாணவர்கள் குறித்து பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 | 

பிரகாஷ்ராஜ் எப்போதும் மோசமாக தான் பேசுவார்: தமிழிசை கடும் கண்டனம்!

நடிகர் பிரகாஷ்ராஜ், தமிழ் மாணவர்கள் குறித்து பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது என்று என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தமிழ் மாணவர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "நடிகர் பிரகாஷ்ராஜ் எல்லாம் ஒரு தலைவர். அவரது கருதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? அவர் எப்போதுமே சரியான கருத்துக்களை பேச மாட்டார். மோசமாக தான் பேசுவார்.

டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழக மாணவர்கள் பறிக்கிறார்கள் என்று கெஜ்ரிவால் கூறுவது தவறானது. திறமையின் அடிப்படையியே டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்க தமிழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

காங்கிரஸ் கட்சியை போல் கெஜ்ரிவாலும் பிரித்தாளும் கொள்கையை உபயோகிக்கிறார். அவர் மக்களிடையே பிரிவினையை தூண்டுகிறார். ஏற்கனவே கெஜ்ரிவால் மற்றும் பிரகாஷ் ராஜின் இந்த கருத்துக்கு டெல்லி தமிழ்ச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP