சென்னை காவல்நிலையத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜர்!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 | 

சென்னை காவல்நிலையத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜர்!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார். 

பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரை பலரும் பணம் கேட்டு மிரட்டியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனை போலீசார் தொடர்பு கொண்டு பேசுகையில், சொத்து விவகாரம் காரணமாக ஊட்டிக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மகள்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP