முதல்வரைத் தொடர்ந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர்! அதிமுகவில் பரபரப்பு..

அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கக்கோரி சிவகங்கையில் அதிமுக நிர்வாகிகள் சிலர் போஸ்டர் ஒட்டியது கட்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

முதல்வரைத் தொடர்ந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர்! அதிமுகவில் பரபரப்பு..

அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கக்கோரி சிவகங்கையில் அதிமுக நிர்வாகிகள் சிலர் போஸ்டர் ஒட்டியது கட்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியது தான் தற்போது தமிழக அரசியல் சூழலில்  பரபரப்பாக பேசப்படும் ஒரு டாப்பிக். ராஜன் செல்லப்பாவின் இந்த கருத்து குறித்து கட்சியின் நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்துக்கு ஒரு சில நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக தலைமையாக இருக்க வேண்டும் என்று கொளத்தூர் அதிமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர் ஒட்டியிருந்தார். இந்த போஸ்டர் பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தற்போது சிவகங்கையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையில் உள்ள அதிமுக நிர்வாகிகள் சிலர் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். 

எனினும், ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்குக்காக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருக்கின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP