பாஜக பிரமுகர் மகன் மீது பிரபல நடிகை பாலியல் புகார்!

தெலுங்கு சினிமா நடிகை பாஜக பிரமுகர் மகன் மீது பாலியல் புகார் தெரிவித்திருப்பது தெலங்கான அரசியலிலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பாஜக பிரமுகர் மகன் மீது பிரபல நடிகை பாலியல் புகார்!

தெலுங்கு சினிமா நடிகை பாஜக பிரமுகர் மகன் மீது பாலியல் புகார் தெரிவித்திருப்பது தெலங்கான அரசியலிலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் மாடல் அழகி சஞ்சனா (27), ஐதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு தெலங்கானான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக பிரமுகருமான நந்தேஷ்வர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்கள் சஞ்சனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து மந்தாப்பூர் காவல் நிலையத்தில் சஞ்சனா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது  மந்தாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சஞ்சனா கொடுத்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆஷிஷ் கவுடு, நடிகையின் புகாருக்கு பின்னால் எதிர்கட்சியினரின் அரசியல் உள்ளதாகவும், விரைவில் காவல்நிலையத்தில் ஆஜராகி உண்மையை தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். தற்போது ஆஷிஷ் கவுடு தலைமறைவாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP