பெண்ணின் கையை தட்டி விட்ட போப்! கிறிஸ்துவர்கள் அதிர்ச்சி!!

புத்தாண்டு தினத்தன்று வாழ்த்து தெரிவித்த ஒரு பெண்ணின் கையை உதறிதள்ளிவிட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதமாக மாறியுள்ளது.
 | 

பெண்ணின் கையை தட்டி விட்ட போப்! கிறிஸ்துவர்கள் அதிர்ச்சி!!

புத்தாண்டு தினத்தன்று வாழ்த்து தெரிவித்த ஒரு பெண்ணின் கையை உதறிதள்ளிவிட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதமாக மாறியுள்ளது. 

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் திருப்பலியை கத்தோலிக்க திருச்சபையின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களை சந்தித்த போப் அவர்களுக்கு கைகுலுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில் பெண் ஒருவர் மகிழ்ச்சியில் போப்பின் கையை பிடித்து இழுத்தார்.

இதில் 83 வயதான போப் ஆண்டவர் சற்று நிலைதடுமாறினார். பின்னர் அப்பெண்ணின் கைகளை உதறித் தள்ளிவிட்டார். இதை தொடர்ந்து பார்வையாளர்களிடம் இருந்து சற்றே விலகி நடந்து சென்றவர் சிறிது நேரம் கழித்து குழந்தைகளிடம் மட்டும் கைகுலுக்கியபடி நடந்து சென்றார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைதிக்கு உதாரணமான பதவியில் இருக்கும் போப், இவ்வாறு நடந்து கொண்டது ஏமாற்றம் அளிப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ், இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், நான் நேற்று மோசமான உதாரணம் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில நேரங்களில் நானும் எனது பொறுமையை இழந்து விடுகிறேன்' என்று கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP