Logo

ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் பொங்கல் பரிசு நிச்சியம் உண்டு!!

பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கார்டு எடுத்துச் சென்று வாங்கலாம். ரேஷன் அட்டைகளைத் தொலைத்தவர்கள், ரேஷன் கார்டில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை காட்டி, பரிசு தொகுப்பை பெறலாம். ஆதார் அட்டை கையில் இல்லாவிட்டால், ரேஷன் கார்டில் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு வரும் OTP எண்ணை தெரிவித்து, பரிசுத் தொகுப்பை பெறலாம்..
 | 

ரேஷன் கார்டு  இல்லாவிட்டாலும் பொங்கல் பரிசு உண்டு!!

தமிழகத்தில் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, தொகுப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, முந்திரி, திராட்சை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

                                                       ரேஷன் கார்டு  இல்லாவிட்டாலும் பொங்கல் பரிசு உண்டு!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது குறித்து வெளியிட்டிருக்கும் அரசாணையில், பயனாளர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு போய் சேரும் வகையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.  “பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி இன்று  தொடங்கி 12.1.2020-க்குள் முடிக்கப்படும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.1.2020 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தினை வழங்கி இப்பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                 ரேஷன் கார்டு  இல்லாவிட்டாலும் பொங்கல் பரிசு உண்டு!!

பொங்கல் பரிசு வாங்க தயாரா :-

  • பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கார்டு எடுத்துச் சென்று வாங்கலாம்.
  • ரேஷன் அட்டைகளைத் தொலைத்தவர்கள், ரேஷன் கார்டில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை காட்டி, பரிசு தொகுப்பை பெறலாம்.
  • ஆதார் அட்டை கையில் இல்லாவிட்டால், ரேஷன் கார்டில் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு வரும் OTP (ஒருமுறை கடவுச் சொல்) எண்ணை தெரிவித்து, பரிசுத் தொகுப்பை பெறலாம்.. இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவுத் தாளில் குறிப்பிடப்பட வேண்டும்.
  • மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதும் அவர்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP