Logo

சின்னங்கள் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்!

சின்னங்கள் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்!
 | 

சின்னங்கள் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்!

தமிழகத்தில் மீதமுள்ள தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

டிசம்பர் 27ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது.இன்று 2ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்து  வருகிறது.

சின்னங்கள் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்!

இரண்டாம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். முதல் கட்ட தேர்தலை விட இரண்டாம் கட்ட தேர்தல் அதிக பதவிக்கு தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சாவடி மையங்களுக்கு அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் 15வது வார்டில் வேட்பாளர்களது சின்னங்கள் இடம் மாறியிருப்பதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஒரத்தநாடு ஒன்றியம் 15வது வார்டில் உள்ள 8 மையங்களில் அதிமுக, திமுக சின்னங்கள் மாறி இருந்ததால் வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP