பொள்ளாச்சி விவகாரம்: நக்கீரன் கோபால் நேரில் ஆஜராக சம்மன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தன்னை மீது அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மீது பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
 | 

பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பொள்ளாச்சி சம்பவத்தில் பல அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல்துறையில் நக்கீரன் கோபால் மீது அவதூறு புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபால் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் கோபால் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP