தமிழக அரசியல் தலைவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்: ராஜபக்சே மகன்

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் விமர்சித்துள்ளார்.
 | 

தமிழக அரசியல் தலைவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்: ராஜபக்சே மகன்

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் விமர்சித்துள்ளார்.

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபயா ராஜபக்சே 13 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நேற்று அதிபராக பதவியேற்ற கோத்தபயவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர் கருத்தை பதிவிட்டிருந்தனர். 

இந்நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும் எம்.பியுமான நாமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததும் இல்லை. அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியலில் தேவைக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை. 

தமிழக அரசியல் தலைவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். 2009ல் யுத்தம் முடிந்ததும், திமுக.,வின் பாராளுமன்ற குழுவினர் இலங்கை வந்து, ராஜபக்சேவுடன் சிநேகமாக பழகியது உலகம் அறிந்த விஷயம், அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது.

ஊடகங்களில் சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால், எமது மக்களின் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமையும்" இவ்வாறு விமர்சித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP