போலீஸ் எனக்கூறி ரூ.2 லட்ச வெள்ளி கட்டிகளை பறிக்க முயற்சி.. தர்ம அடி கொடுத்த மக்கள்!

போலீஸ் எனக்கூறி ரூ.2 லட்ச வெள்ளி கட்டிகளை பறிக்க முயற்சி.. தர்ம அடி கொடுத்த மக்கள்!
 | 

போலீஸ் எனக்கூறி ரூ.2 லட்ச வெள்ளி கட்டிகளை பறிக்க முயற்சி.. தர்ம அடி கொடுத்த மக்கள்!

சென்னை அருகே போலீஸ் எனக்கூறி வெள்ளி வியாபாரியிடம் 2 லட்சம் மதிப்பிலான வெள்ளி கட்டிகளை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் தேரடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பெரம்பூரில் இருந்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகளை வாங்கிக்கொண்டு இந்துக் கல்லூரி ரயில் நிலையம் வந்துள்ளார். அவரிடம் போலீஸ் அதிகாரி போல் நடித்து, துப்பாக்கியை காட்டி மிரட்டி வெள்ளிக் கட்டிகளை மர்மநபர்கள் இரண்டு பேர் பறிக்க முயன்றனர்.

போலீஸ் எனக்கூறி ரூ.2 லட்ச வெள்ளி கட்டிகளை பறிக்க முயற்சி.. தர்ம அடி கொடுத்த மக்கள்!

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மர்மநபர்களை விரட்டிப் பிடிக்க முயன்றதில் ஒருவர் தப்பியோடினார். மற்றொருவரை பிடித்த பொதுமக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய பாட்ஷா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP