ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற சென்னை மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் மதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 | 

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற சென்னை மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மீதும், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, போலீசாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற சென்னை மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் மதனை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சமீபத்தில், காவல்துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியில் புகைப்படத்துடன் வந்த காவலரின் புகாரை அடுத்து இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP