மற்றொரு அதி நவீன ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்ட திட்டம்!

ஆழ்துளை கிணறு தோண்ட மற்றொரு அதி நவீன ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பத்தால் ஆன இந்த இயந்திரம் 3 மடங்கு வேகத்தில் பாறையை துளையிடும் சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

மற்றொரு அதி நவீன ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்ட திட்டம்!

ஆழ்துளை கிணறு தோண்ட மற்றொரு அதி நவீன ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. 

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து 48 மணி நேரங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட முயற்சியாக குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டி, சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் நிறுவனத்தின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 7 மணியளவில் பணிகள் தொடங்கின. ஆனால் பாறைகள் இருப்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து மற்றொரு அதிநவீனமான ரிக் இயந்திரம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டது. ஜெர்மன் தொழில்நுட்பத்தால் ஆன இந்த இயந்திரம் 3 மடங்கு வேகத்தில் பாறையை துளையிடும் சக்தி வாய்ந்தது. தற்போது, புதிதாக வரவழைக்கப்பட்ட ரிக் இயந்திரத்தில் உதிரி பாகங்களை இணைக்கும் பணி நடைபெற்று வருவதால் காலதாமதம் ஏற்பட கூடாது என்பதற்காக ஏற்கனவே துளையிடப்பட்டு வரும் இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP