வழக்காடு மொழியாக தமிழ்: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

"சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது" என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்.
 | 

வழக்காடு மொழியாக தமிழ்: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

"சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது" என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களுமே மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இது தொடர்பாக, திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கும் போது, "சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதே போல்,  மேற்குவங்கத்தில் பெங்காலி, குஜராத்தில், குஜராத்தி மொழி மற்றும் கர்நாடகாவில், கன்னட மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார். 

மேற்கண்ட மாநிலங்களில் உள்ள உயர்நிதி மன்றங்களில் ஆங்கிலம் மட்டுமே வழக்காடு மொழியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP