மேக்கப் இல்லாமல் இருக்கும் செம்பாவின் புகைப்படம்... ஷாக்கான ரசிகர்கள்..

மேக்கப் இல்லாமல் ராஜா ராணி சீரியல் நடிகை செம்பா இப்படிதான் இருப்பாங்களா... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் ...
 | 

மேக்கப் இல்லாமல் இருக்கும்  செம்பாவின் புகைப்படம்... ஷாக்கான ரசிகர்கள்..

மேக்கப் இல்லாமல் ராஜா ராணி சீரியல் நடிகை செம்பா இப்படிதான் இருப்பாங்களா... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் ...

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் ஆல்யா மானசா. அதோடு, அந்த சீரியல் மிகவும் குடும்ப பாங்கான பெண்ணாகவும், சாதுவாகவும் இருந்ததால் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். இந்நிலையில், சீரியலில் கணவன், மனைவியாக நடித்த கார்த்தியும், செம்பாவும் நிஜவாழ்க்கையிலும், காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு இருவரும் ஜோடியாக வெளியூர்கள் செல்வது, விளம்பரங்களில் நடிப்பது என அவ்வபோது செய்திகள் வெளியாகி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஆலியா பிறந்தநாள் அன்று இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.  சமீபத்தில் ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளதாக சஞ்சீவ் தெரிவித்திருந்தார்.

அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆலியா தற்போது விளம்பரம் ஒன்றிற்காக மேக்கப் போடாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் இப்படிதான் இருப்பாங்களா என ஷாக்காகியுள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP