கனிமொழி வெற்றிக்கு எதிரான மனு வாபஸ்!

தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 | 

கனிமொழி வெற்றிக்கு எதிரான மனு வாபஸ்!

தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வேட்பு மனுவில் பல குறைபாடுகள் உள்ளது என்றும், வேட்புமனு பரிசீலனையின் போது கூறிய ஆட்சேபங்களை தேர்தல் அதிகாரி நிராகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த  மனு குறித்து திமுக எம்.பி கனிமொழி மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்.23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணையின் போது தமிழிசை தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தான் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பமில்லை. எனவே வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை தெரிவித்துள்ளார். 

மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், வாபஸ் மனு மீது அக்டோபர் 14 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என அறிவித்தது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP