தேர்தலுக்காகவே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி : திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

கர்நாடக தேர்தலுக்காகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இந்திய மக்களை ஏமாற்றி வந்த இந்த மத்திய அரசு வெகுநாள் இருக்காது எனவும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
 | 

தேர்தலுக்காகவே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி : திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

தேர்தலுக்காகவே மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், " தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாத நிலையில், எடப்பாடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடக தேர்தலுக்காகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய மக்களை ஏமாற்றி வந்த இந்த மத்திய அரசு வெகுநாள் இருக்காது என கூறினார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து மத்திய மோடி அரசு துரோகம் இழைத்து வருகிறது. தமிழக அரசு அடிமையாக செயல்பட்டு வருகிறது என குற்றம்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு, "தமிழக மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் மோடி அரசு நயவஞ்சகத்தோடு செயல்படுகிறது. மத்திய  அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது. அதற்கு எடப்பாடி அரசு துணைபோகிறது. வரும் தேர்தலில் மத்திய அரசுக்கும், எடப்பாடி அரசுக்கும் சரியான பாடம் புகட்டப்படும். தமிழகத்தின் உரிமையை ஒருபோதும்  விட்டுக் கொடுக்க மாட்டோம் என கூறினார். 

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி பேச்சு : "நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றில் அணை கட்டக் கூடாது என சட்டம் இருந்தும், மத்திய பாஜக அரசு அதனை மதித்து நடக்கவில்லை. தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடைபெறுகிறது. அதனை மத்திய அரசு பின்னால் இருந்து இயக்குகிறது என தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP