இரு தலைவர்கள் மறைவிற்கு பிறகு மோடியையே மக்கள் வரவேற்கின்றனர்: இல.கணேசன்

தமிழகத்தில் இரு தலைவர்களின் மறைவுக்கு பிறகு 3வது மாற்று சக்தியான மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளதாக பாஜக எம்.பி. இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
 | 

இரு தலைவர்கள் மறைவிற்கு பிறகு மோடியையே மக்கள் வரவேற்கின்றனர்: இல.கணேசன்

தமிழகத்தில் இரு தலைவர்களின் மறைவுக்கு பிறகு 3வது மாற்று சக்தியான மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளதாக பாஜக எம்.பி. இல. கணேசன் தெரிவித்துள்ளார். 

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், “கருப்பு பணத்தை வைத்து ஆட்சி நடத்தியத்தியவர்களுக்குதான் பணமதிப்பிழப்பு செய்த நாள் கருப்பு தினம், நாட்டு நன்மையை மட்டுமே சிந்தித்த பா.ஜ.கவுக்கு அது கொண்டாடப்படும் தினம். பிரதமர் ஆக வேண்டும் என்ற பதவி பேராசையில் சந்திரபாபு நாயுடு பல்வேறு கட்சியினரையும் சந்தித்து வருகிறார் ஆனால் அது நிறைவேறாது. காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள் ராகுலின் தலைமையை ஏற்கவில்லை, அது காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தின் வெளிப்பாடு. பா.ஜ.க ஆட்சி பாஸிச ஆட்சி என பேசும் திமுக தலைவர் ஸ்டாலின் பாஸிசத்தின் அர்த்தம் என்ன என்பது பற்றி முதலி தெரிந்து கொள்ள வேண்டும். கலைஞர் கருணாநிதி வாழ்ந்த காலத்தில் திமுகவை நோக்கி சிறிய கட்சிகள் வந்தன. ஆனால் இப்போது திமுகசிறிய கட்சிகளையே நோக்கி செல்கிறது. இமயம் போல் உள்ள பா.ஜ.கவை வீழ்த்துவோம் என ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. தமிழகத்தில் இரு தலைவர்களின் மறைவுக்கு பிறகு 3வது மாற்று சக்தியான மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. சர்க்கார் பட விவகாரத்தில் மறு தணிக்கைக்கு தயாரான தணிக்கை குழு இதை முன் கூட்டியே கவனித்திருக்கலாம்” என்று கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP