சுர்ஜித் மரணம் குறித்த  உண்மை மக்களுக்கு தெரியும் - டிடிவி தினகரன்

சுர்ஜித் மரணத்தில் உள்ள உண்மை மக்களுக்கு தெரியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

சுர்ஜித் மரணம் குறித்த  உண்மை மக்களுக்கு தெரியும் - டிடிவி தினகரன்

சுர்ஜித் மரணத்தில் உள்ள  உண்மை மக்களுக்கு தெரியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் குடும்பத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிறுவனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுவன் சுர்ஜித் மரணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும் தமிழக மக்கள்  தீபாவளியை கொண்டாடாமல் சுர்ஜித் நலமுடன் வரவேண்டும் என பிரார்த்தித்தனர் என்று குறிப்பிட்ட அவர், சுர்ஜித் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் நிறைய தகவல் வந்து கொண்டிருப்பதாகவும், தமிழக மக்களுக்கு சுர்ஜித் மரணத்தில் உள்ள உண்மை தெரியும் என்றும் கூறினார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP