தினகரனை மக்கள் புறக்கணித்துவிட்டனர்

டிடிவி தினகரனை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என்று, தலைமைச்செயலகத்தில் இன்று முதல்வர், சபாநாயகரை சந்தித்த பின் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி செய்தியாளர்களுக்கு இவ்வாறு பேட்டியளித்தார்.
 | 

தொடர்ந்து அவர் அளித்த் பேட்டியில் மேலும், ‘தடுமாறி போயிருந்த என்னை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டுவந்த பெருமை  விஜயபாஸ்கரையே சாரும். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இணைந்தேன். கட்சியும், சின்னமும் இங்கே இருப்பதால் இதுதான் உண்மையான அதிமுக என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதிமுக எம்எல்ஏவாக செயல்படுவேன். தினகரன் தனிக்கட்சி தொடங்கிய உடனே விலகிவிட்டேன். அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். பிரபு, கலைச்செல்வன் மீண்டும் தாய் கழகத்திற்கு வருவார்கள் என நம்புகிறேன்’ என்றார். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP