வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழக அரசு வேட்டை தடுப்பு காவலர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.2500 கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
 | 

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழக அரசு வேட்டை தடுப்பு காவலர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.2500 கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 1,119 வேட்டைத்தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், மாதாந்திர தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை, 2,500 ரூபாய் அதிகரித்து 12,500 ரூபாயாக வழங்கப்படும் அறிவித்தார். அதன்படி இன்று ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP