பாம்பன் தூக்குப் பாலம் சீரமைப்பு: 84 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை

ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப் பாலம் சீரமைக்கப்பட்டதையடுத்து 84 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
 | 

பாம்பன் தூக்குப் பாலம் சீரமைப்பு: 84 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை

பாம்பன் தூக்குப் பாலம் சீரமைக்கப்பட்டதையடுத்து 84 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் பழுது ஏற்பட்டதையடுத்து கடந்த 4ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் ரயில்கள் அனைத்தும் மண்டபம் வரையே இயக்கப்பட்டது. அங்கிருந்து பயணிகள் பேருந்துகள் போன்ற மற்ற வாகனங்கள் மூலம் ராமேஸ்வரம் சென்றனர். 

இந்நிலையில், பாம்பன் தூக்குப்பாலத்தில் நடைபெற்ற சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, 84 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. பயணிகள் ரயில்கள் வழக்கம் போல் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP