அமைச்சர் பந்து வீச பேட்டிங் செய்து கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..!

அமைச்சர் பந்து வீச பேட்டிங் செய்து கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..!
 | 

அமைச்சர் பந்து வீச பேட்டிங் செய்து கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு பேட் செய்து விளையாடினார். அவருக்கு அமைச்சர் பந்துவீசினர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளைாயாட்டு போட்டியை சென்னை மாநில கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்துகொண்டார்.

அமைச்சர் பந்து வீச பேட்டிங் செய்து கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..!

அப்போது பேசிய முதல்வர், உடல் ஆரோக்யம் இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். உடல் ஆரோக்யத்துக்கு விளையாட்டு மிகவும் முக்கியம். பொதுமக்களும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனப் பேசினார். பின்னர் போட்டியைத் தொடங்கி வைக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட் செய்ய, அவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீசினார். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கலகலப்பாக்கியது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP