கடுமையான வறுமையிலும் படித்து நெல்லை டிஎஸ்பி ஆனார் பீடி தொழிலாளியின் மகள்!

திருநெல்வேலி பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் ஒருவர், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார். அரசுப்பள்ளியில் படித்த இவர், வறுமையால் உயர்கல்வி படிக்க முடியவில்லை.
 | 

கடுமையான வறுமையிலும் படித்து நெல்லை டிஎஸ்பி ஆனார் பீடி தொழிலாளியின் மகள்!

திருநெல்வேலி பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் ஒருவர், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை, பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை உள்ளிட்ட பணிகளுக்காக குரூப் 1 தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இதில் முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகள் உள்ளன. 

கடந்த 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வின் நேர்காணல் சமீபத்தில் முடிவடைந்தது. இதற்கான தேர்வானவர்களுக்கு பணிகளும் நேற்று ஒதுக்கப்பட்டன. 

இதில், திருநெல்வேலி சன்யாசி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம்- பால்தாய் தம்பதியின் மகள் சரோஜா வெற்றி பெற்று திருநெல்வேலி டிஎஸ்பி ஆக தேர்வாகியுள்ளார் இவரது தந்தை திரையரங்க ஊழியர், தாய் பீடி சுற்றும் தொழிலாளி. 

அரசுப்பள்ளியில் படித்த இவர், வறுமையால் உயர்கல்வி படிக்க முடியவில்லை. எனவே அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தாற்காலிக ஆசிரியராக சேர்ந்தார். அந்த பணத்தை வைத்து தொலைதூர கல்வியில் .லிட், எம்.ஏ. முடித்தார். 

கடுமையான வறுமையிலும் படித்து நெல்லை டிஎஸ்பி ஆனார் பீடி தொழிலாளியின் மகள்!

தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தன்னை தயார் படுத்தினார். பல  போட்டித்தேர்வுகளையும் எழுதி அனுபவம் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து குரூப் 1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக படித்ததின் பலனாக, தேர்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி டிஎஸ்பி ஆக தேர்வாகியுள்ளார். 

இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஒட்டுமொத்த கிராமமும் அவரது வெற்றியை கொண்டாடி வருகிறது. இதையறிந்த நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் ஷெட்டி, சரோஜாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

சாதனைக்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ள டிஸ்பி சரோஜாவுக்கு நியூஸ்டிஎம் சார்பாக வாழ்த்துக்கள்...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP