முதல்வரிடம் விருது பெற்ற நெல்லை தம்பதியினர்!

நெல்லையில் கொள்ளையர்களை போராடி விரட்டியடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினருக்கு முதல்வர் இன்று விருது வழங்கினார்.
 | 

முதல்வரிடம் விருது பெற்ற நெல்லை தம்பதியினர்!

நெல்லையில் கொள்ளையர்களை போராடி விரட்டியடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விருது வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை, எலுமிச்சை தோட்டத்துடன் கூடிய தங்களது வீட்டில் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இரவு சண்முகவேல் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது, இரண்டு கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கினர்.

ஆனால், சண்முகவேல் சிறிதும் பயப்படாமல், எதிர்த்து நின்று கொள்ளையர்களை தாக்கி அடித்து விரட்டினார். இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வயதான நிலையிலும், துணிச்சலுடன் கொள்ளையர்களை விரட்டியடித்த அந்தத் தம்பதியினருக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் பலர் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நெல்லை தம்பதியினருக்கு வீர தீர விருது வழங்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நெல்லை தம்பதியினரின் துணிச்சல் மிக்க செயலை பாராட்டி அவர்களுக்கு 'அதீத துணிவுக்கான' விருதினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP