நிபந்தனைகளை மீறிய ப.சிதம்பரம்! மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!

நிபந்தனைகளை மீறிய ப.சிதம்பரம்! மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!
 | 

நிபந்தனைகளை மீறிய ப.சிதம்பரம்! மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!

ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் ஜாமீனில் வெளிவந்த சிதம்பரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் எம்.பி.கள் வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். அதில் கலந்துகொண்ட ப. சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்து , ''பொருளாதார விவகாரங்களில் பாஜக ஒன்றன் பின் ஒன்றாக தவறு செய்தே வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும். நாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை' எனப் பேசியிருந்தார்.


இந்நிலையில் அமைச்சராக இருந்த காலத்தில் எந்தவொரு தவறும் நடைபெறவில்லை என்று சிதம்பரம் பேசியிருப்பதாகவும், ஆனால் ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் சிதம்பரத்திற்கு தொடர்புள்ளது என்ற அடிப்படையில் தான் வழக்கே உள்ளது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதன் மூலம் ஜாமீன் நிபந்தனைகளை சிதம்பரம் மீறியிருப்பதாக  ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.. ந உச்ச நீதிமன்றம், வழக்கு குறித்து கருத்து எதுவும் கூறக் கூடாது என நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், "ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ள முதல் நாளிலேயே நிபந்தனையை மீறி இருக்கிறார்.  தனக்கு தானே நன்னடத்தை சான்று அளித்துக் கொண்டிருப்பது நிபந்தனையை மீறிய செயலாகும்" என்று வன்மையாக கண்டித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP