அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குமரி கடல் பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP