தமிழகத்தில் இதுவரை 19 லட்சம் பேருக்கு வாக்குச் சீட்டு விநியோகம்!

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1.91 கோடி பேருக்கு வாக்குச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 5.79 கோடி பேருக்கு வாக்குச்சீட்டு விரைவில் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் இதுவரை 19 லட்சம் பேருக்கு வாக்குச் சீட்டு விநியோகம்!

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 19 லட்சம் பேருக்கு வாக்குச் சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 5 கோடியே 79 லட்சத்து 52 ஆயிரத்து  87 பேருக்கு வாக்குச்சீட்டுகள் விரைவில் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 5,98,69,758 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள்  - 2,95,94,923 பேர், பெண்கள் - 3,02,69,045 பேர் அடங்குவர். திருநங்கைகள் - 5,790 பேர் உள்ளனர்.

மேலும், மின்னணு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இதுவரை 2,51,905 பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 11,58,840 பேருக்கு இவையும் விரைவில் தரப்படவுள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது. மின்னணு புகைப்பட வாக்காளர் அட்டைக்கு மொத்தம் 14,10, 745 பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP