ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பாக மாற்ற உத்தரவு 

குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்ட பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்று வாரியப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
 | 

இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரம் பிறப்பித்த உத்தரவில்,  ‘ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள்,  நீர் உறிஞ்சு கிணறுகளை 24 மணி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற தவறும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற பொதுமக்கள் உதவி பெறலாம். இதுதொடர்பாக, twadboardtn.gov.in என்ற இணையதளத்திலோ, சமூக வலைதள பக்கத்திலோ விளக்கங்களை பெறலாம். மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றிய சந்தேகம் இருந்தால் 9445802145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் இறந்ததை அடுத்து பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP