பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு: மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
 | 

பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு: மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். 

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் 2வயது குழந்தை சுஜித் சிக்கியுள்ள சம்பவம் தமிழகம் மட்டுமின்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தேனி மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லாத, உபயோகத்தில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உரிமையாளர்கள் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதா என வருவாய்த்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். 

இதேபோல், கடலூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள பராமரிக்கப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அனைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP