Logo

விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெறலாம்: அதிமுக அறிவிப்பு

மேயர், நகராட்சி, பேருராட்சி தலைவர் பதவிக்கு விருப்ப மனு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
 | 

விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெறலாம்: அதிமுக  அறிவிப்பு

மேயர், நகராட்சி, பேருராட்சி தலைவர் பதவிக்கு விருப்ப மனு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்வு செய்யப்படுவார். இந்த முறை 2006ல் பின்பற்றப்பட்டது. பின்னர் 2011ஆம் ஆண்டில் மீண்டும் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. இதனால், உள்ளாட்சி தேர்தல் வருவதையொட்டி ஒவ்வொரு கட்சி சார்பிலும் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வந்தது. 

தற்போது தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளதால், மேயர், நகராட்சி, பேருராட்சி தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். நவ.25 முதல் 29 வரை விண்ணப்ப கட்டணம் செலுத்திய ரசீதுடன் வந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் பணத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு தரலாம் என்றும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் விண்ணப்பத்தை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP