நேர்மையான ஆட்சியாளரை கண்டு எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குகின்றன: பிரதமர் மோடி

நேர்மையான ஆட்சியையும், ஆட்சியாளரையும் கண்டு எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குகின்றன. கலப்பட மருந்தை மக்கள் எப்படி ஏற்க மாட்டார்களாே, அதே போல், இந்த கலப்பட கூட்டணியையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.
 | 

நேர்மையான ஆட்சியாளரை கண்டு எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குகின்றன: பிரதமர் மோடி

திருப்பூரில் பிரதமர் மோடி உரை: " இந்த மோடி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். மக்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கமாட்டார்கள் என கூறி வரும் எதிர்க்கட்சிகள் எதற்காக மெகா கூட்டணி அமைக்க வேண்டும். எதற்காக மோடிக்கு எதிராக தொடர்ந்து அவதுாறு பேச வேண்டும்? 

நேர்மையான ஆட்சியையும், ஆட்சியாளரையும் கண்டு எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குகின்றன. கலப்பட மருந்தை மக்கள் எப்படி ஏற்க மாட்டார்களாே, அதே போல், இந்த கலப்பட கூட்டணியையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள். குடும்ப அரசியல், வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்ப நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளன.

விவசாயிகள் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது; பல திட்டங்களை அறிவித்தும் உள்ளது. நாட்டில் திட்டமிட்டே பதற்றத்தை ஏற்படுத்தும் பணியில், எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. 

இதுபோன்ற கூச்சல்களால், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை. இந்த பட்ஜெட்டில், விவசாயிகள் நல நிதி என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு, 6,000 ரூபாய், சிறிய விவசாயிகளுக்கு கிடைக்கும் படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. ஏனென்றால், விவசாயிகள் ஏழைகளாக இருக்கும் வரைதான் அவர்கள் அரசியல் செய்ய முடியும். விவசாயிகளை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். 10 ஆண்டுகளில், 7 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் படியான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதிலிருந்தே, விவசாயிகளுக்கு யார் அதிக நன்மை செய்துள்ளனர் என்பது புரிந்து விடும். 

மீனவர் நலன் கருதி தனி இலாகா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஏன் இதைப்பற்றி யோசிக்கவில்லை.

ஐஸ் கிரீமுக்கும், மொபைல் ரீசார்ஜுக்கான பேமிலி பேக்கேஜ் தான் இதுவரை இருந்தது. ஆனால், சிலர், தாங்கள் செய்த குற்றத்திற்காக கைதாவதிலிருந்து தப்பிக்க, குடும்பத்துடன் சென்று ஜாமின் பெற்று வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP