தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
 | 

தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

சட்டப்பேரவையில் காந்தி, பெரியார், அண்ணா, காமராஜர், திருவள்ளுவர், அம்பேத்கர், காயிதே மில்லத், எம்ஜிஆர், முத்துராமலிங்கத் தேவர், ராஜாஜி, ஜெயலலிதா ஆகிய 11 பேரின் படங்கல் ஏற்கனவே உள்ளன. இந்த நிலையில், 12-ஆவது படமாக காமராஜர் முதல்வராக இருந்துபோது உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றிய ராமசாமி படையாட்சியாரின்  உருவப்படத்தை  சட்டப்பேரவை மண்டபத்தில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். 

ராமசாமி படையாட்சியார் படத்திற்கு கீழே ‘வீரம்...தீரம்...தியாகம்’ என எழுதப்பட்டுள்ளது. இந்த விழாவில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP