அடுத்த 3 நாட்களில் வெங்காய விலை குறைய வாய்ப்பு: தமிழக அரசு 

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 | 

அடுத்த 3 நாட்களில் வெங்காய விலை குறைய வாய்ப்பு: தமிழக அரசு 

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். 

இதன்பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாசிக், ஆந்திராவில் இருந்து அதிகளவில் வெங்காயம் வருவதால் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. வெங்காய விலை தொடர்பான நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்கும் பதுக்கல் இல்லாமல் பொதுமக்களுக்கு சிரமமின்றி வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலம் வெங்காயத்தை கொள்முதல் செய்ய முதலமைச்சரின் உத்தரவு பெறப்படும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP