வெங்காய விலை அதிரடியாக குறைய வாய்ப்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி!

வெங்காயம் தட்டுப்பாட்டை நீக்க மேலும் 11 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 | 

வெங்காய விலை அதிரடியாக குறைய வாய்ப்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி!

வெங்காயம் தட்டுப்பாட்டை நீக்க மேலும் 11 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை நீக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெங்காயத்தை பதுக்கி வைப்பதை காண்காணிக்கவும், விலை உயர்வை கண்காணிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு வினியோகம் செய்து வருகிறது. ஏற்கனவே 6ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த வெங்காயம் அடுத்த வாரத்தில் மும்பை துறைமுகம் வந்து சேரும். இந்நிலையில், மேலும் 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய எம்.எம்.டி.சி. 'ஆர்டர்' கொடுத்துள்ளது. இந்த வெங்காயம் துருக்கியில் இந்து அடுத்த மாதம் வந்து சேரும் என கூறப்படுகிறது. 

Newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP