கஜா புயல் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு அதிகாரிகள் செல்லவில்லை : அன்புமணி ராமதாஸ்

கஜா புயல் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு அதிகாரிகள் செல்லவில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்கிய பிரதமர், இங்கு பார்வையிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
 | 

கஜா புயல் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு அதிகாரிகள் செல்லவில்லை : அன்புமணி ராமதாஸ்

கஜா புயல் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு அதிகாரிகள் செல்லவில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில்  உள்ள பாமக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டோம். புயலால் பாதிக்கப்பட்ட பல நூறு கிராமங்களுக்கு இன்னும் அதிகாரிகள் செல்லவில்லை. கேரளாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்கிய பிரதமர், இதுவரை இங்கு உள்துறை அமைச்சர்களைக் கூட அனுப்பி பார்வையிடாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP