தென்காசி சுற்றுவட்டாரத்தில் கிருஷ்ணசாமியை ஆதரித்து ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம்!

சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவிலில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
 | 

தென்காசி சுற்றுவட்டாரத்தில் கிருஷ்ணசாமியை ஆதரித்து ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

முதலில் சங்கரன்கோவில் வந்த துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான கிருஷ்ணசாமி சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து, சங்கரன்கோவில், சண்முக நல்லூர், கரிவலம் வந்த நல்லூர் ஆகிய பகுதிகளில், கிருஷ்ணசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியதாவது: மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துக்கூறி, மத்திய, மாநில திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு நல்ல வேட்பாளர் கிருஷ்ணசாமி. மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கக் கூடிய தேர்தல் இந்த நாடாளுமன்றத் தேர்தல். 

தென்காசி சுற்றுவட்டாரத்தில் கிருஷ்ணசாமியை ஆதரித்து ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம்!

மக்களுக்கு தாலிக்கு தங்கம், மகப்பேறு உதவி என பல்வேறு சலுகைகளை அதிமுக அரசு வழங்கியுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள, 60 60 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் திமுக தான். நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழங்கினால் தான் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு, கண்டிப்பாக அனைவருக்கும் முழுமையாக வழங்கப்படும்.

திமுக தலைவர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை மக்களிடம் பரப்பி தமிழக முதல்வர் ஆகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அது நடக்காது.நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக காணாமல் போகும் என்று கூறி வருகிறார்.

மெரினா பீச்சில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி 10 லட்சம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் மோடியிடம் எடுத்துக் கூறியதால், அதற்கான துறையினரை அழைத்து உடனடியாக தீர்வு கண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறப்பட்டது.

தென்காசி சுற்றுவட்டாரத்தில் கிருஷ்ணசாமியை ஆதரித்து ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம்!

மேலும், 1500 கோடி செலவில் தென் மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், 200 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மருத்துவமனை, தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதிமுக வேட்பாளர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தங்களது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP