மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை!

தமிழகத்தில் 31 மாவட்ட நீதிபதிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை!

தமிழகத்தில் 31 மாவட்ட நீதிபதிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகளுக்கான 31 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சுமார் 3, 562 பேர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், இதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.  இது நீதித்துறையில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினாத்தாளில் இருந்து கேள்விகள் மிகவும் கடினமானதாகவும், தவறான கேள்விகளுக்கு மைனஸ் மதிப்பெண்களாலும் யாராலும் தேர்ச்சி பெற முடியவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பதால், வருகிற மே மாதம் நடைபெற உள்ள பிரதான தேர்வு நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP