சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக மனு

எதிர்க்கட்சி தலைவர் சார்பில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டப் பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.
 | 

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக மனு

எதிர்க்கட்சி தலைவர் சார்பில் தமிழக சட்டசபையின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர  சபை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. 

அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், தினகரன் ஆதரவு எம்ஏல்ஏக்களான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ  கலைச்செல்வம் ஆகியோர் விளக்கம் அளிக்ககோரி  சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

அதைத்தொடர்ந்து 3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார்

இந்த நிலையில், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளர் சீனிவாசனை இன்று நேரில் சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP