Logo

அரசியலில் இருந்து விலகினாலும் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை: வெங்கையா நாயுடு!

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நான், பொது வாழ்விலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை என்று சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
 | 

அரசியலில் இருந்து விலகினாலும் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை: வெங்கையா நாயுடு!

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நான், பொது வாழ்விலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை என்று சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார். 

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய 'லிசனிங், லேர்னிங், லீடிங்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். 

விழாவில் பேசிய துணைக்குடியரசுத் தலைவர், "நான் மிகவும் சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது குடும்பத்தில் யாரும் அரசியலில் செய்ததில்லை. இதுவரையிலும் அரசியலுக்கு வந்ததில்லை. ஆனால், நான் மட்டுமே இளம் வயதிலே அரசியலுக்கு வந்து பல்வேறு துறைகளில் இருந்துள்ளேன். உண்மையாகவே எனது அரசியல் வாழ்க்கை எனக்கு திருப்திகரமாக இருந்தது. 

குடியரசுத் தலைவராக வேண்டும் என்று என் வாழ்நாளில் நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் இப்போது கட்சியை சேர்ந்தவர் இல்லை. ஆனால், அரசியலில் எனக்கு அனைத்து விதமான பதவிகளையும் கொடுத்தது பாஜக தான். துணை குடியரசுத் தலைவர் பதவியையும் அளித்தார்கள். நான் கட்சிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறும் போது என்னையறியாமல் கண்ணீர் விட்டேன். எனது 13 வயதில் இருந்து நான் கட்சியின் மூலமாக மக்களை சந்தித்து மக்களோடு பணியாற்றி வருகிறேன். நீங்கள் உங்களுக்கு பிடித்த முக்கிய இரண்டு விஷயங்களை இழக்கப் போகிறீர்கள் என்று கூறினார்கள். மக்களுடன் நேரடியாக பணியாற்றுவது மற்றும் மீடியாக்களில் பேசுவது. ஆனால், அதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் தான் எனது பணியை செவ்வனே செய்து வருகிறேன். 

அரசியலில் இருந்து விலகினாலும் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை: வெங்கையா நாயுடு!

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நான், பொது வாழ்விலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை. பொதுவாழ்வில் உள்ளவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். கட்சி வேறுபாடின்றி அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது. "உங்களோடு உரையாடுவது மகிழ்ச்சி" என்று தமிழிலும் தெரிவித்தார். 

தொடர்ந்து, கட்சிக்காக வாஜ்பாயின் பெயரை சுவரில் எழுதிய நான், அக்கட்சியின் தலைவராக, வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு இடையே என்னை அமர்த்தியதை என்னால் மறக்க முடியாது. கட்சிக்காக பணியாற்றிய எனக்கு கட்சியும் உரிய மரியாதையை கொடுத்தது. 

சட்டமன்றம்; நாடாளுமன்றம்; நீதித்துறை(Legislature; Executive; Judiciary) இந்த மூன்றுமே நம் நாட்டில் சிறப்பாக இருந்து வருகிறது. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் அதனை ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்தவேண்டும். 

உலக அளவில் இந்தியா மீதான மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உலக அளவில் இந்தியாவுக்கான மதிப்பு, மரியாதை அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நான், இதை நேரில் பார்த்துள்ளேன்.

அரசியலில் இருந்து விலகினாலும் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை: வெங்கையா நாயுடு!

நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்தியா அபரித வளர்ச்சி அடைந்து வருகிறது.

அதே நேரத்தில் நாட்டில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்னைகளை களைய வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தும் 20 சதவீத மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

எம்,எல்.ஏக்கள் எம். பிக்கள் மீதான வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்தல் தொடர்பான வழக்குகளிலும் விரைந்து தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். தீர்ப்பு வழங்குவதற்கு அடுத்த தேர்தலே வந்துவிடுகிறது. இதன்மூலம் ஒரு கட்சியில் வென்றவர்கள் அடுத்த கட்சிக்கு தாவும் நிலையை தவிர்க்கலாம். எனவே, குறிப்பிட்ட கால அளவில் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP