ரேஷன் கார்டு இல்லையா? பொங்கல் பரிசு உண்டு!! வெளியானது புது அறிவிப்பு!!

ரேஷன் கார்டு இல்லையா? பொங்கல் பரிசு உண்டு!! வெளியானது புது அறிவிப்பு!!
 | 

ரேஷன் கார்டு இல்லையா? பொங்கல் பரிசு உண்டு!! வெளியானது புது அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, தொகுப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, முந்திரி, திராட்சை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஜனவரி 9ம் தேதி முதல் இந்த பொங்கல் தொகுப்பு பரிசுகள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட இருக்கிறது. இந்த பரிசு தொகுப்புக்காக தமிழக அரசு சார்பில் 2,363 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு இல்லையா? பொங்கல் பரிசு உண்டு!! வெளியானது புது அறிவிப்பு!!

தற்போது இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது குறித்து வெளியிட்டிருக்கும் அரசாணையில், பயனாளர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு போய் சேரும் வகையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி 9.1.2020 தொடங்கி 12.1.2020-க்குள் முடிக்கப்படும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.1.2020 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தினை வழங்கி இப்பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு இல்லையா? பொங்கல் பரிசு உண்டு!! வெளியானது புது அறிவிப்பு!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000-ம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். பணத்தை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக் கூடாது என்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டைகள் மூலமாகத் தான் வழங்க வேண்டும் என்றும், ஒரு வேளை ரேஷன் அட்டைகளைத் தொலைத்திருந்தாலோ, எங்கேயாவது ஞாபக மறதியாக வைத்திருந்தாலோ அவர்களுக்கும்  பொங்கல் பரிசுத் தொகுப்பு நிச்சயமாக உண்டு என்றும், அப்படி குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் OTP (ஒருமுறை கடவுச் சொல்) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவுத் தாளில் குறிப்பிடப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP