ஜெ.வின் கோட்டையான திருப்பரங்குன்றம் தொகுதியை எவராலும் தொட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

எத்தனை கோடி செலவிட்டாலும், ஜெயலலிதாவின் கோட்டையாக விளங்கும் திருப்பரங்குன்றம் தொகுதியை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

ஜெ.வின் கோட்டையான திருப்பரங்குன்றம் தொகுதியை எவராலும் தொட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

எத்தனை கோடி செலவிட்டாலும், ஜெயலலிதாவின் கோட்டையாக விளங்கும் திருப்பரங்குன்றம் தொகுதியை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து நேற்று விளாச்சேரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவும் அமமுகவும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆயிரம் ரூபாயும், டிடிவி.தினகரன் ஆயிரம் ரூபாயும் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குவதன் மூலம் வெற்றியை பெற்று விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.

எத்தனை கோடி செலவிட்டாலும், ஜெயலலிதாவின் கோட்டையாக விளங்கும் திருப்பரங்குன்றம் தொகுதியை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஜெயலலிதாவின் சாதனைகள் திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

திமுக மற்றும் தினகரன் அணி வெற்றிபெற்று விடலாம் என்று கனவு கண்டு இருக்கிறார்கள் அது எப்போதும் நிறைவேறாது.
மதங்கள் தொடர்புடைய பிரச்சாரம் கண்டிக்கத்தக்கது. அதிலும் ஒரு மதத்தின் மீது கமல்ஹாசன் கூறிய கருத்து தவறானது. அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது.

எந்த சமுதாயமாக இருந்தாலும் அதிமுக அனைத்து மக்களையும் ஏற்றுக்கொண்டு செயலாற்றுகிறது. எவ்வித மத கலவரத்தை தூண்டும் விதமாக யார் எதைக் கூறினாலும் வேற்றுமையை மறந்து தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு உட்பட்ட சட்டத்தின் அடிப்படையில் கமல்ஹாசன் பேச்சு எதிரானதாக இருந்தால் அவர் மீது நிச்சயமாக வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கும். 

திமுகவை போன்ற சந்தர்ப்பவாத கட்சி எதுவுமே இருக்க முடியாது. மு.க.ஸ்டாலின் நிறத்தை மாற்றும் பச்சோந்தியை போன்று செயல்பட்டு வருகிறார். சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்தது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், 23ஆம் தேதிக்குப் பிறகு இது குறித்து விவரம் அறிவிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது சந்தேகத்திற்குரியது. 23ஆம் தேதிக்கு திமுகவிற்கு ஏமாற்றமே கிடைக்கப் பெறும்" என கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP