அதிமுக தலைமையில் எந்த மாற்றமும் இல்லை! - அமைச்சர்கள் தகவல்

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், வரும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
 | 

அதிமுக தலைமையில் எந்த மாற்றமும் இல்லை! - அமைச்சர்கள் தகவல்

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், வரும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆகியோரது தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். 

இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் செல்போன் கொண்டு செல்லப்பட அனுமதிக்கப்படவில்லை. மேலும், இந்தக் கூட்டத்தில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய மூன்று எம்.எல்.ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்காததால் அவர்கள் பங்கேற்கவில்லை. 

அதிமுக தலைமையில் எந்த மாற்றமும் இல்லை! - அமைச்சர்கள் தகவல்

சுமார் ஒன்றரை மணி நேரமாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் பகல் 12 மணியளவில் நிறைவு பெற்றது. கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துவகையான நடவடிக்கைகளையும் எடுக்க கட்சியின் நிர்வாகிகளுக்கு அதிமுக அறிவுறுத்தியுள்ளது.

வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும் நிர்வாகிகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், உங்களது தனிப்பட்ட கருத்துக்களை நேரடியாக தலைமையிடம் கூறுங்கள்; ஊடங்கங்களில் தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், "கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மட்டுமே ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்ட்டது. 

தற்போதுள்ள நிர்வாகமே தொடர்ந்து செயல்படும். ராஜன் செல்லப்பாவும் இதற்கு ஒப்புக்கொண்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்தார். 

அதேபோன்று அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, "இன்று நடைபெற்றது வழக்கமான ஆலோசனைக்கூட்டம் தான். தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த ஆபத்தும் இல்லை. தலைமையில் மாற்றமில்லை" என்றார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP